கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களின் இருப்பு,நில,நிருவாக,காணி கேள்விக்குறியாகியுள்ளது  . எஸ்.வியாழேந்திரன்

(க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களின் இருப்பு,நில,நிருவாக,காணி கேள்விக்குறியாகியுள்ளது.இதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து  ஆளுந்தரப்பில் மட்டக்களப்பில் பாராளுமன்றம் அனுப்புவதற்கு மொட்டுக்கு வாக்களியுங்கள். தமது இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ள ஒரு தரப்பாக கிழக்கு மாகாணம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமாகிய எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில்(1) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத் தமிழர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு போராடும் இனமாக தமிழ்மக்கள் இருக்கின்றார்கள்.நாங்கள் 100 மேற்பட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.இன்றைய இருப்பு,நில,நிருவாகம் பறிபோகும் நிலையில் தமிழ்மக்கள் துடுப்பிழந்த அரசியல் தலைமையே ஆகும்.சகல அதிகாரம் உள்ள அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் எங்களின் இருப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் எம்மை பிழையாக வழிகாட்டிய தமிழ்தலைமைகளே ஆகும்.
கிழக்கில் தமிழர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு களத்தில் நிற்கின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலவளத்தினையும், உரிமையினையும்,அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்செல்ல தங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் என  அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரனை ஆதரிக்கும் வகையிலான தேர்தல் பிரசார அலுவலகம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் ஏற்பாட்டில் அவரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் க.கார்த்திக்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.