ரீ.எல்.ஜவ்பர்கான்–
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் முழு உலகிலுமிருந்தும் நீங்கவும் கொரோனாவினால் பாதிப்படைந்து வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவோர் விரைவாகக் குணமடையவும் வேண்டி காத்தான்குடியில் விசேட பிரார்த்தனை வைபவம் இடம் பெற்றது.
காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளன செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி தலைமையில் நேற்று புதிய காத்தான்குடி அல் மஸ்துல் அக்சாவில் இடம் பெற்ற விசேட துஆ பிரார்த்தனை வைபவத்தில் பள்ளிவாயல் இமாம் அஸ்ஸெய்க் எம்.எம்.எம்..இல்ஹாம் மதனி பிரார்த்தனை நிகழ்வை நடாத்தி வைத்தார்.
சமுக இடைவெளி பேணப்பட்டு குறிப்பிட்ட தொகையினருடன் இவ் வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வீடியோவுக்குhttps://www.youtube.com/watch?v=hPU9BoXBI0U இங்கே அழுத்தவும்.