ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த மொட்டு கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மதகுருமார்கள் கோரிக்கை

(எஸ்.கார்த்திகேசு)

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதபதி ஒரு கட்சியும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஒரு கட்சியுமாக கநடட அரசாங்கத்தில் பல பிரச்சினைகளை நாடு எதிர் கொண்டு இருந்தன எனவே இம்முறை இவ்வாறு இன்றி நாட்டின் சிறந்த தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு இம்முறை ஆதரவு வழங்க வேண்டும் என அம்பாறை மாவட்ட  இந்து பௌத்த கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு மகளிர் மற்றும் இளைஞர் அமைப்பு மற்றும் கிழக்கு மக்கள் முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை அக்கரைப்பற்று சுவாட் நிறுவன கேட்போர் கூடத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை(30) இடம்பெற்ற 30 அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் இவ் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 30 மக்கள் அமைப்புக்களோடு இணைந்து செயற்பட்டு வரும் கிழக்கு மக்கள் முன்னணி இம்முறை பாராளுமன்ற தேர்தலில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று இருந்ததுடன் இவ் கூட்டத்தில் இந்து பௌத்த கிருஸ்தவ இஸ்லாமிய மதகுருமார்களுடன் மொட்டு கட்சியின் அம்பாறை மாவட்ட வேண்பாளர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.

இதன் போது உரையாற்றி மதகுருமார்களே தற்போது எமது நாட்டு மக்களுக்கு நன்மை கிமைக்கும் வகையில்  சிறந்த தீர்க்கமானங்களை நிறைவேற்றக்கூடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கிடைத்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் சிறப்பான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒரு கட்சியின் ஊடாக ஆட்சி அதிகாரங்களை வைத்திருப்பதன் ஊடாகவே நாட்டை சீராக அபிவிருத்தி செய்து இன ஜக்கியத்துடன் நாட்டை கட்டியெழுப்ப கூடியதாக இருக்கும்.
இதனடிப்படையில் நாட்டு மக்கள் நிதானமாக சிந்தித்து சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

இவ் கூட்டத்தில் சங்கைக்குறிய அம்பாறை சுஹதகம சீலரத்ன தேரர் அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் ஆலையடிவேம்பு தேவர் கிராம அலிகம்பை தேவாலய குரு அருட்தந்தை சூசைநாயகம் மௌலவி அஸீஸ் கிழக்கு மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் முகம்மது நிஸாம் கிழக்கு மகளிர் மற்றும் இளைஞர் அமைப்பு தலைவி ரிலிபா பேகம் மொட்டுக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் 30 அமைப்புக்களின் நிருவாகிகள் என சுமார் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.