கதிர்காம யாத்திரைகுழுவினர் மட்டக்களப்பில்.

0
185

கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை  முன்னிட்டு யாழ்  தொண்டமனாறு செல்வசந்நிதி  ஆலயத்திலிருந்து

ஆரம்பித்த புனித  பாத யாத்திரையின்  பக்தர்கள் அடங்கிய குழுவினர்  நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்  .

இலங்கை நாட்டில் சாந்தி ,சமாதனம் ,நல்லிணக்கம் ,இனங்களுக்கிடையே

ஒற்றுமை  மற்றும்  தற்போது  நாட்டு மக்களை அச்சுத்தித்திக்கொண்டிருக்கும்

கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து   விடுபடவேண்டும் என   யாழ்

தொண்டமனாறு செல்வசந்நிதி   ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம கந்தன்

ஆலயத்திற்கான  பாத யாத்திரை  பக்தர்கள்   நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை  வந்தடைந்தனர்

மட்டக்களப்பை  வந்தடைந்த   பாத யாத்திரையின்  பக்தர்கள்  அமிர்தகழி மாமாங்கேஸ்வரர்   ஆலயத்தில்  இன்று காலை இடம்பெற்ற  பூஜை வழிபாடுகளுடன்  பாத யாத்திரை பக்த குழுவினர்   கதிர்காமத்தை  நோக்கி  பயணிக்கவுள்ளனர்

 

இதேவேளை  யாழ்  தொண்டமனாறு ல்வசந்நிதி  ஆலயத்திலிருந்து   ஆறுபேர் கொண்ட பக்த குழுவினர்ஆரம்பித்த புனித  பாத யாத்திரையின்  பக்தர்கள் அடங்கிய குழுவினர்  நேற்று மாலை மட்டக்களப்பு  ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன்  ஆலயத்தை வந்தடைந்தனர்

ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன்  ஆலயத்தில்  இன்று காலை இடம்பெற்ற  பூஜை வழிபாடுகளுடன்  பாத யாத்திரை பக்த குழுவினர்  கதிர்காமத்தை  நோக்கி  பயணிக்கவுள்ளனர்

. இந்த புனித   பாத யாத்திரை பக்த குழுவினர் கதிர்காமம் முருகன்  ஆலயத்தினை சென்றடைந்ததும்

கதிர்காம கந்தன் ஆலய  வருடாந்த கொடியேற்ற  உற்சவத்தில் கலந்து

சிறப்பிப்பதுடன் தமது  பாத யாத்திரையினை நிறைவு செய்யவுள்ளனர் .