சுமார் நான்கு மாதங்களின் பின்னர் மட்டு.மாவட்டத்தில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டது

0
130

ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்பட்டன.

முதல் கட்டத்தின் கீழ்இ அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் இன்று பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்தனர்.
சுகாதாரப் பிரிவினர் வழங்கிய சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலைகள் திறக்கப்பட்டன.ஆசிரியர்களும் ஊழியர்களும் சுகாதார நடைமுறைகளைப் பேணி முகக்கவசமணிந்து கைகளைக் கழுவி சமுக இடைவெளிகளைப் பேணி சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.