அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் ஆறு வன்முறைச்சம்பவங்கள் பதிவு

பாண்டிருப்பு
கிழக்கில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையிலான வன்முறைச்சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் இதுவரை ஆறு தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட பெப்ரல் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் மாவட்ட இணைப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வாரங்களில் கல்முனை, சாய்ந்தமருது, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய இடங்களில் எதிர் எதிர் கட்சியினருக்கும் மற்றும் ஒரே கட்சியைச்சேர்ந்த ஆதரவாளர்களுக்குள்ளும் சிறு சிறு வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் பாரிய வன்முறை சம்பவம் சாய்நதமருது பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் நீதிமன்றத்தின் கவனத்திற்க்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் உள் கட்சி முறுகல் இடம்பெற்றுள்ளது. இதேபோன்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், கருணாம்மனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு தீர்;க்கப்பட்டுள்ளது.
தற்போது பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு குழுவினால் இருபது வீதமான தேர்தல் நிலையங்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கரையோரப்பிரதேசங்களான சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் ஏழு நீ;ண்டகால கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒருவர் வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு பிரதேச செயலகங்களுக்கு இடையில் ஏழு தேர்தல் கண்காணிப்பு வாகனங்களையும் நியமிப்பதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இம் முறை கண்காணிப்புக்களை கையடக்கத்தொலைபேசிகள் ஊடாக  எலக்ரோனிக் முறையில தேர்தல் சம்பவங்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட பெப்ரல் தேர்தல் கண்காணிப்புக்குவின் இணைப்பாளர் கே.சத்தியநாதன் தெரிவித்தார்.