தலவாக்கலையில் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற வெற்றிக்கூட்டம்!

இன்று (27.06.2020) தலவாக்கலையில் எமது தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு தொலைபேசியில் அழைத்தமைக்காக திரண்டு வந்தவர்கள் பணத்திற்காவோ வேறு எந்த சலுகைக்காகவும் வரவில்லை. தந்தைக்காகவும் மலையக மாற்றத்திற்காகவும் வந்தார்கள். எதிர்கால அரசியலின் பங்குதாரர்களாக வந்தார்கள்! சோற்றுப்பார்சலுக்கும் சாராயத்திற்கும் அடிபணியாது கொள்கைக்காக வந்தார்கள். இன்னும் பலரை அழைக்கமுடியாததற்கு வருத்தமாக இருந்தாலும் குறைவான எண்ணிக்கையுடையவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் பெருமளவானவர்கள் வருகை தந்தது எமது வெற்றியை மேலும் உறுதிபடுத்தியது என தெரிவித்திருந்தார்.

தலவாக்கலை நிருபர்