மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

0
146

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டம்  நேற்று அதாவது 27 06 2020 வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி டாக்டர் கலாரஞ்சனி அவர்களின் தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 கொரோனா தொற்றின் பின்னர் நடைபெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் மதிய நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் நடைபெற்றது

குறிப்பாக இவ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நோயாளர்கள் நலன் சார்ந்த விடயங்கள் பல ஆராயப்பட்டது அத்துடன்  வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது இதில் குறிப்பாக வைத்தியசாலையின் கட்டிடடத் தேவைகள் ஆளனி பற்றாக்குறை சம்மந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன் வைத்தியர்களின் தட்டுபாடு அதனால் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை  வழங்க முடியாது   ஏற்படும் அசௌகரியங்கள் சம்மந்தமாகவும் எதிர் காலத்தில் அமைக்கப்படவிருக்கும் கட்டிடங்கள் சம்மந்தமாகவும் பணிப்பாளர், மற்றும் பிரதிப்பணிப்பாளர் ஆகியோர்கள் விளக்கமளித்தனர்

இக் கூட்டத்தில் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள் கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும்  அதிகமான வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்