மட்டு முகத்துவாரம் ஆற்றுவாயை சட்டவிரோதமாக வெட்ட முற்பட்ட அம்பாறை ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 33 பேர் கைது 3 வாகனங்கள் மற்றும் மண்வெட்டிகள் மீட்பு

( வேதாந்தி, மட்டுமாறன்)

மட்டக்களப்பில் நேற்றிரவு இனம்தெரியாத நபர்களினால் முகத்துவாரம் ஆற்றுவாய்வெட்டும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாகஆளும் கட்சி அம்பாறை வேட்பாளர் ஒருவர் உட்பட 33 பேரை கைது செய்ததுடன் 3 வாகனங்கள் மற்றும் மண்வெட்டிகளை மீட்டுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்திலிருந்துவந்த 30ற்கு மேற்பட்டநபர்களினால் இவ்சட்டவிரோத நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கண்ணுற்ற பிரதேசபொதுமக்கள் சம்பவத்தை உடனடியாக மட்டக்களப்பு மாநகரமுதல்வர் தியாகராஜா சரவணபவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து ஸ்தலத்திற்கு சென்ற மாநகரமுதல்வர் பொலிசாரின் கவனத்திற்கும்,  இராணுவத்தினரின் கவனத்திற்கும்கொண்டுவந்ததையடுத்து சந்தேக நபர்கள் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யபட்டுள்ளனர்.

அத்துடன் முன்னாள் அரசாங்கஅதிபரும் தற்போதைய கூட்டமைப்பு வேட்பாளருமாகிய மாணிக்கம் உதயகுமார் மாநகரசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு  சென்று உரியநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட சட்டவிரோத செயல்தொடர்பாக மாநகரமுதல்லர் மட்டக்களப்பு பொலிசில் நேற்றிரவு 9.30மணியளவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் பற்றி தெரியவருவதாவது

அம்பாறை மாவட்டத்தின் விவசாயிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டு முகத்துவாரம் ஆற்றுவாயினை வெட்டிவிடுமாறு  கோரிக்கை முன்வைத்துள்ளனர்..

கரவாகுப்பற்று நற்பபட்டிமுனை மற்றும் கிட்டங்கி நாவிதன்வெளி விவசாயிகளின் தாழ்நில விவசாயகாணிகள் முழுமையாக வெள்ளத்தினால் கிட்டத்தட்ட (5000) ஐயாயிரம் எக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிட்டனர் இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் பேசியதன் அடிப்படையில்  நேற்று(27) ஆற்றுவாய் வெட்டும் தீர்மானிக்கும் மாவட்ட செயலணி அவசரமாக கூட்டி தீர்மானம் எடுக்கவேண்டிய தேவையின் அடிப்படையில் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது

இவ்வாறானதொரு செயற்பாடு கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்று எமது மாவட்டம் கடும் வரட்சியை எதிர்கொண்டு குடிநீர் முழுமையாக மக்களுக்கு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டமையும் குறிப்பிட்ட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

நீர் வடிந்தோடுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக கானப்படுவது துறைசார் திணைக்களத் தலைவர்கள் இங்கு குறிப்பிட்டிருந்தனர் இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் திருமதி வன்னியசிங்கம் கலைவாணி குறிப்பிடுகையில் சாதாரனமாக 112 மில்லி மிற்றர் நீர் நிறம்பியதன் பின்னர்தான்வெட்டுவது தொடர்பில் ஆராயப்படும் தற்போது 40 மில்லி மீற்றர் இருப்பதனால்  முகத்துவாரம் வெட்டுவது இல்லையென நேற்றைய கச்சேரிக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இச்செய்திகள் ஊடகங்கள் மூலம் நேற்று வெளியாகி இருந்தது.

இச்செய்தியினை அறிந்த அம்பாறைமாவட்டத்தைச்சேர்ந்த 50ற்கு மேற்பட்ட நபர்கள் இரவோடு இரவாக வாகனத்தில் வந்து வாகனங்கனை மயிலம்பாவெளிப்பகுதியில் நிறுத்தி விட்டு சகலரும் நடந்து வந்து அவசரமாக ஆற்றுவாயினை வெட்டியுள்ளனர்.

இதனைகண்ணுற்ற பிரதேசபொதுமக்களின் உதவியுடன் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது்.

தற்போது குறிப்பிட்ட பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இருவாரங்களுக்கு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்டபிரிகேடியர் தனக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதாக மாநகரமுதல்வர் தியாகராஜா சரவணபவான் சுபீட்சத்திடம் தெரிவித்தார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக மட்டுஅரசாங்க அதிபரோ பிரதேச செயலாளரோ  உடனடியாகஎவ்வித நடவடிக்கைளையும் மேற்கொள்ளவில்லையென பிரதேசவாசிகள் கவலைதெரிவித்தனர்.

திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியின் 2 ம் இலக்க வேட்பாளர் கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்கா தலைமையிலான குழுவினரே இவ் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்த முகத்துவாரம் வெட்டுவதானால் கமலலசேவைகள், மற்றும் நீர்ப்பாசன சேவைகள் திணைக்களம், அரசாங்க அதிபர் ஆகியோரின் அனுமதியுடன் அதனை வெட்டவேண்டும் இருந்தபோதும் அதனையும் மீறி சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாயை வெட்டினால் மட்டக்களப்பு ஆற்றிலுள்ள மீன்கள் இல்லாமல் போகும் மற்றும்  கிணறுகளில் நீர் இல்லாமல் போகும், போன்ற பல பிரச்சனைகள்; ஏற்படும்
எனவே இந்த ஆற்றுவாயை வெட்டமுடியாது அதேவேளை அம்பாறை மாவட்டதிலுள்ள அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம்,  தம்பட்டை முகத்துவாரம். ஒலுவில் முகத்துவாரம் போன்றவற்றின் ஆற்றுவாயை வெட்டமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை மேஜர். ரி.சரவணபவன்  மேலும் தெரிவித்தார்.