களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொலிசாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
346
(கமல்)
கொரண வைரஸ் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் அணியாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் தற்போது அரசினால் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக களுவாஞ்சிகுடி பொலிசாரிடம் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர்.
சிக்கியவர்கள் அனைவரினதும் விபரங்கள் பொலிசாரினால் பதியப்பட்டு பின்னர் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.இவ்வாறு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் இவ்வாறு நடைபெற்றது.எதிர்வரும் காலங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக இதனை தெரிவிக்கலாம்