சம்மாந்துறையில் நூல் வெளியீட்டு விழா

(அ.அஸ்வர்)
 

சம்மாந்துறை எம்.எம். நெளஸாத் எழுதிய ” பூச்செண்டுபோல் ஒரு மனிதன் ” எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நாளை (28) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் எஸ். எல்.எம். ஹனீபா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் நூல் பற்றிய கருத்துரையினை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், எழுத்தாளர்களான  உமா வரதராஜன்,  அப்துல் ஆபித்,  ஏ.எம்.சாஜித் அஹமட் ஆகியோர் நிகழ்த்துவர்.