எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளதையிட்டு பாடசாலைகளுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பிராந்திய சுகாதாரபணிமனைகள் ஈடுபட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று சுகாதாரப்பணிமனையின் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.கிருஸ்ணகுமார் வழிகாட்டலில் பிரதம மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பிரதேசத்திலுள்ள அனைத்துப்பாடசாலைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுவருகின்றன.
இதற்கமைய இன்று(26) பட்டிருப்பு தேசியபாடசாலையில் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் கே.இளங்கோ மற்றும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணந்து கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது பாடசாலை வளாகம், வகுப்பறைகள் உட்பட பாடசாலை சுற்றுப்புறங்கள் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.