முதியோர்கள் சமூகத்திற்கு ஒரு வளமாகும் – கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தெரிவிப்பு.

0
182
(ஏ.எல்.எம்.ஷினாஸ்) 

பிரதேச செயலாளர்கள் பிரிவில் முதியோர்கள் இருப்பது ஒரு வளமாகும் என கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழுள்ள சிரேஸ்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த வருமானம் குறைந்த முதியோர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (26.06.2020) முதியோர் அமைப்பின் தலைவர் வி.தியாகராஜா தலைமையில் கல்முனை பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதேச செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றும் போது,

முதியோர்கள் ஒரு வளமாகும். இவர்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களது அனுபவம் பெறுமதிமிக்கதாகும். ஆனால் வீடுகளிலும் இளைஞர்கள், சிறுவர்கள்மத்தியில் இவர்களுக்கான கௌரவம் கிடைப்பதில்லை. சில வேளைகளில் சில முதியோர்கள் கவனிப்பார் இல்லாமல் கைவிடப்படுகிறார்கள் இது கவலையான விடயமாகும். நாம் எல்லோரும் ஒருநாள் முதியோர் என்ற பட்டத்தை அடையத்தான் போகிறோம். என்பதை அறிந்து செயற்பட வேண்டும்.

இவர்கள் ஒவ்வொருவரும் நல்ல கலைத்துறை ஈடுபாடு உடையவர்கள். இவர்களது ஆற்றல் அனுபவங்களை அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். முதியோர்களுக்கான பாதுகாப்பு வாழ்வாதாரங்கள் சரியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை  முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்தார்.

இந்ந நிகழ்வில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதில் சமூகசேவைகள் உத்தியோகத்தர் கே.சிவகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எல்.சுபாஸ்கரன், கிராம சேவை அதிகாரி, முதியோர் சங்கத்தின் நிருவாக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.