அரசியல் தீர்வுக்கான தேர்தல்இதுவாகும். திருமலையில் சம்பந்தன்.

(கதிரவன்)

அரசியல் தீர்வுக்கான தேர்தல்இதுவாகும்.இக்காரியத்தினையார் உள்நாட்டிலும்வெளிநாட்டிலும்  முன்னெடுப்பார்கள் என்பது மக்களுக்குத்தெரியும் எனவே மக்கள் சரியான முடிவினையெடுத்து  கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில்  அதிகப்படியான வாக்குகளை தமிழ்தேசியகூட்டமைப்புக்கு வழங்கவேண்டுமென தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமலையில் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில், புதியஅரசியல்அமைப்பு உருவாகவேண்டுமென  பாராளுமன்றத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு இதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வந்தன.அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இன்று நாம் எமது மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வினை பெறவேண்டிய சந்தர்ப்பத்தில்  உள்ளோம்.இதனை சகல அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அண்மையில் பிரதமமந்திரி பிளவுபடாத நாட்டுக்குள் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென தெரிவித்துள்ளார்.இதே நிலைப்பாட்டைத்தான் ரணில்விக்கிரமசிங்கவும் சஜித்பிரேமதாசவும் கொண்டுள்ளனர்.

எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டுமென ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் சர்வதேசத்துக்கு எழுத்துமூலம் உட்பட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள் அதிலிருந்து இலங்கைஅரசாங்கம் தப்பிக்கமுடியாது.

கோத்தபாயராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இந்தியப்பிரதமரின் விசேடதூதுவர் இலங்கைக்கு வந்து தமிழ்மக்களின் பிரச்சினைகுறித்தே பேச்சுநடத்தியதுமட்டுமன்றி தமிழ்மக்களுக்கு தன்னிறைவான தீர்வினை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்மக்கள் வாக்குகளைப்பிரிக்காமல் ஒரே குடையின்கீழ் தங்களதுவாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கும் நாட்டுக்கும் நல்ல செய்தியை எடுத்துக்காட்ட வேண்டும்.

 எமது மக்களின் காரியங்களை யார் முன்னெடுத்துச்செல்வார்கள் என சிந்தித்து தமிழ் தேசியகூட்டமைப்புக்கு அதிகப்படியான ஆசனங்களை பெற்றுக்கொடுக்கவேண்டுமென்றார்.