குழந்தைகளுக்கான கதை சொல்வோம் பரிசு வெல்வோம் போட்டி

0
144

( நிப்றாஸ் மன்சூர் )

அம்பாறை மாவட்ட சிறுர்களை மையப்படுத்தி வாசிக்கும் சமூகத்தினை வித்திட சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்  எனும் தொனிப் பொருளில் சர்வதேச சிறுவர் வாசிப்பு தினம் மற்றும் உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் முகமாக  சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஏ.ஆர் மன்சூர் பெளண்டேசன் குழந்தைகளுக்கான கதை சொல்வோம் பரிசு வெல்வோம் போட்டியை  நடாத்தவுள்ளது.

இப் போட்டியில் பங்குபற்றும் அனைத்து குழந்தைகளுக்கும்  சிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதுடன் முதலாம்,இரண்டாம்,மூன்றாம்  இடங்களை பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும்  பல  ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட உள்ளன.

உங்கள் அன்பு குழந்தைகளின் கதைகள் உள்ளடங்கிய வீடியோவை 077 44 33 0 44 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதுடன்  ஒருவர் ஒரு வீடியோவை மாத்திரமே அனுப்பிவைக்கவும்  முடியும் மேலும்  குழந்தைகளின் பெயர் ,முகவரி,வயது, மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண் என்பவற்றையும் சேர்த்து அனுப்பிவைக்குமாறும் போட்டி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்.