பிறைந்துறைச்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள்கைது

0
141

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பிறைந்துறைச்சேனை பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மூன்று சந்தேக நபர்களிடம் இருந்து 4300 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் மற்றைய சந்தேக நபரிடம் இருந்து பாவனைக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் துசிதகுமார மற்றும் குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் பன்டார ஆகியோர் தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா, பொலிஸ் உத்தியோகத்தர் புஸ்பகுமார ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயின், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் அதிகம் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.