கருணா அம்மானுக்கு சுகயினம் குற்றப்புலனாய்வுத்துறைக்கு செல்லமுடியாதநிலை.புதிய திகதி வழங்குமாறுமு் கோரிக்கை.

0
226

எல்.ரீ.ரீ.ஈ முன்னாள் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான்  வாக்குமூலம் வழங்க  குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு சமுகமளிக்கவில்லையென  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன  தெரிவித்துள்ளார்.

கருணா, தனது வழக்கறிஞர்கள் மூலம், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் குணமடையும் வரை திணைக்களத்தின் முன் ஆஜராக முடியாது என்றும் சிஐடியிடம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக  கருணாவின் சட்டத்தரணி கடிதம்ஊடாக தெரிவித்திருந்த நிலையில் இன்னுமொரு திகதியை கோரியுமிருந்தனர்.ஆனால்  இதுவரை புதிய திகதிவழங்கப்படவில்லையென போலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.