உகந்தை ஸ்ரீமுருகன் ஆலய உற்சவத்துக்கு நாள் ஒன்றுக்கு 200 பேர் வழிபாட்டில் கலந்து கொள்ள முடியும்

0
421

(எஸ்.கார்த்திகேசு)
உகந்தை ஸ்ரீமுருகன் ஆலய உற்சவத்திற்கு அம்பாறை மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி
-நாள் ஒன்றுக்கு 150 பேர் வழிபாட்டில் கலந்து கொள்ள முடியும் மேலதிக அரசாங்க அதிபர் கோரிக்கை-வே.ஜெகதீசன் தெரிவிப்பு

கிழக்கிலங்கை வரலாற்று சிறப்புமிக்க உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் மற்றும் உற்சவங்களை நடாத்துவது தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றும் பொதுக் கூட்டம் லாகுகல பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

இவ் கூட்டமானது லாகுகல பிரதேச செயலாளர் அனுறுத்த சந்தறுவான் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை(22) இடம்பெற்று இருந்தன.

உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்ற உற்சவமானது எதிர்வரும் மாதம்(07) 21 திகதி ஆரம்பமாகி ஒகஸ்ட்(08)  மாதம் 04 திகதி தீர்த்தோற்சவத்துடன் இவ்வாண்டுக்கான உற்சவம் நிறைவு பெறவுள்ளன. இந்நிலையில் இவ் உற்சவம் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றும் கூட்டம் இடம்பெற்று இருந்தன.

இவ் கூட்டத்திற்கு பௌத்த இந்து குருமார்கள் கலந்து கொண்டு இருந்ததுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்து கொண்டு இருந்த அதேவேளை பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் லாகுகல பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர் லாகுகல பிரதேச சபை செங்காமம் இராணுவ முகாம் அதிகாரி பாணமை கடற்படை முகாம் அதிகாரி மற்றும் திருக்கோவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள் வனபரிபாலன தினைக்கள் அதிகாரிகள் ஆலய நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் அச்சம் காரணமாக அரசின் சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக இம்முறை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடார்ந்த கொடியேற்ற உற்சவத்தினை நடாத்தவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வ.ஜெகதீசன் அவர்கள் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தார்.

அந்தவகையில் இம்முறை பாதயாத்திரியர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வருடார்ந்த கொடியேற்றம் மற்றும் உற்சவ காலங்களில் ஆலயத்திற்கு பக்தர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஒரு வேளை இதன் பிரகாரம் 50பேர் கொண்ட நான்கு குழுக்கள் மாத்திரம்  ஒரு நாளிலே வழிபாட்டிலே கலந்து கொள்ள முடியும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது

இதேவேளை பூஜை உபயகாரர்கள் 50 பேர்  கொண்ட பெயர் பட்டியலை தயாரித்து அந்தந்த பிரதேச சுகாதார வைத்தய அதிகாரியின் அனுமதியைப் பெற்று ஆலயத்திற்கு வருகை தரவேண்டும் என்றும் இவ்வாறு நடைமுறையை பின்பற்றாது வருவோர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவே பக்தர்கள் நிலைமைகளை புரிந்து கொண்டு சிரமங்களை தவிர்த்து கொள்ளும் அதேவேளை ஆலயத்திற்கு வருவதற்கான அனுமதிகளைப் பெறுகின்றவர்கள் மேற்படி விதிமுறைகளுக்கு அமைவாக நடந்து கொள்ளுமாறும் வெளி மாவட்ட பக்தர்கள் எந்தவித காரணங்களுக்காகவும் அனுமதி வழங்கப்பட மாவட்டாது எனவும் தெரிவித்து இருந்தார்.

ஆலய வழிபாடுகளுக்காக 50 பேர் கொண்ட குழு தமது வழிபாடுகளை முடித்து மீண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் ஆலயத்தில் தரித்து நிற்பது இம்முறை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதேவேளை ஆலயத்தில் குடிநீர் மற்றும் பொது மலசல கூட வசதிகள் பாதுகாப்பு ஒழுங்குகள் என்பன வழமை போன்று இடம்பெறும் என்றும் அன்னதானம் இடம்பெறமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.