வாகரை பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை இடமாற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

வாகரை இலங்கை வங்கி கிளை முகாமையாளர் வி.தரணிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் திருமதி.குமுதினி யோகரெட்ணம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வங்கி கிளையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் டமித் எக்கநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட பொது முகாமையாளர் ஏ.பிரதீபன், திருகோணமலை மாவட்ட பொது முகாமையாளர் வி.பிரதீபன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கி கிளை முகாமையாளர்கள், வங்கி ஊழியர்கள், மதகுருமார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மதகுருமார்களின் ஆசீர்வாதத்துடன், மத அனுஸ்டானங்களுடன் வாகரை பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை திறந்து வைக்கப்பட்டதுடன், வாகரைப் பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரால் பணம் வைப்புச் செய்து வங்கி நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தார்.

இதில் மதகுருமார்கள் மற்றும் பணம் வைப்புச் செய்த வர்த்தகர் ஆகியோருக்கு இலங்கை வங்கி கிளையினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரை பிரதேசத்திற்கான இலங்கை வங்கி கிளை வாகரை பிரதேச சபைக்கு அருகில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் டிஜிட்டல் தானியங்கியுடனான வங்கி சேவையினை வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக இடமாற்றப்பட்டுள்ளதாக கிளை முகாமையாளர் வி.தரணிதரன் தெரிவித்தார்