அம்பாறை மாவட்டத்தில் இரு பாரிய மீன்கள் கரையொதுங்கியும், மீனவர்வலையில் சிக்கியுள்ளது.

(க.விஜயரெத்தினம் , திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு
 பாறுக் ஷிஹான், எம் எம் ஜெஸ்மின்)

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கோமாரி வாடியடிப் கடற்கரைப் பகுதியில் சுமார் 15 அடி நீளமாக இராட்சத மீன் ஒன்று கரையொதிங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்துஇதனை பார்வையிடுவதற்கான கிராம மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற கோமாரி இராணுவம் மீனை பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கும் மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் இராட்சத மீனை துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டதனைத் அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் புதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் ரீ.சுபோதரன் தெரிவித்தார்.

இதே வேளை கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பெரியநீலாவணை  கடற்கரையில்   நேற்று ஞாயிற்றுக்கிழமை(21)காலை பெரியநீலாவணையைச் சேர்ந்த வல்லிபுரம் திருநாவுக்கரசு என்பருக்கு சொந்தமான கரைவலையில் 20அடி நீளமான கொடுப்புலி மடையன்சுறா மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பிடிக்கப்பட்ட மீனை மனித பாவனைக்கு(சாப்பிடுவதற்கு) பயன்படுத்துவதில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இன்றையைதினம் கடற்கரையில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதற்கு கரை வலையை வளைந்து கரையில் இருந்து வலையை ஏராளமான இழுத்துள்ளார்கள்.வலையை சிரமத்தின் மத்தியில் இழுத்துள்ளார்கள்.மீனானது இயற்கையாக நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும்,அதனால் கரையை நோக்கி மீன் தாவியிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.20 அடி நீளமான 1-1/2 (18Cm)அடி உயரமான உடம்பில் புள்ளிகளுடன் காணப்படும் மீனை பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள்.

அரிய வகை புள்ளி சுறாவினை  பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டது.இவ்விரு மீன்களையும் பார்ப்பதற்கு அதிகளவான மக்கள் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர்.