மட்டக்களப்பு நகரில் மணல்தரையுள்ள தனியார் கல்விநிலையங்கள்  இயங்கத்தடை.

மட்டக்களப்பு நகரில் மணல்தரையுள்ள தனியார் கல்விநிலையங்கள் எதிர்வரும் 29ம்திகதி மீண்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என  மட்டக்களப்பு நகருக்குப்பொறுப்பான பொதுச்சுகாதாரப்பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தெரிவித்தார்.

 கொரனா தடுப்பை இலக்காகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தும் தனியார் கல்விநிலையங்களே 29ம் திகதிமுதல் இயங்கமுடியும்.

அந்த வகையில் தனியார் கல்வி நிலையங்கள் பின்வரும் வி்டயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சமூகஇடைவெளிபேணலும் முகக்கவசம் அணிதலும்,  ஓடும்நீரில் கைகழுவும் வசதி, கட்டத்தின் மேற்பரப்பு நிலம் சுவர் என்பன தொற்று நீக்கம் செய்யப்படல்,சுவாசம் சம்பந்தமான பாதுகாப்பு. பாவிக்கப்படும் கடதாசிகள் மூடப்பட்ட  குப்பைத்தொட்டியிலிட்டு பின்பு கடதாசிகள் எரிக்கப்படவேண்டும்.

50மாணவர்களுக்கு ஒரு குப்பை தொட்டிலும் 100மாணவர்களாயின் இரு குப்பைத்தொட்டில்களும் பாவிக்கப்படவேண்டும் என்றார்.