மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த பாடுபடுகின்ற கல்விசார் சமுகம் போற்றப்பட வேண்டும்

தாங்களாகவே முன்வந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த பாடுபடுகின்ற கல்விசார் சமுகம் போற்றப்பட வேண்டியதென பொறியியலாளரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய மு.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், கொவிட் 19 தாக்கத்தினால் இலங்கை நாடும் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச மக்களின் கல்வி என்னவாகுமோ? என சிந்திக்கும் வேளையில் தாங்களாகவே முன்வந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த பாடுபடுகின்ற கல்விசார் சமுகம் போற்றப்பட வேண்டியது.
பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நிலையறிந்து சந்தர்ப்பத்தை மாணவர் காலடிக்கே கொண்டு சென்ற கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
எமது மக்களின் மூலதனம் கல்வியே இதனை எவ்வாறேனும் பாதுகாப்பதன் மூலமே சமுக முன்னெடுப்புக்களைச் சிறப்பாக செய்ய முடியும். மாணவச் செல்வங்கள் தொடர்ச்சியான கற்றலை மேற்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன் என்றார்.