கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றத்தின் கொரோனா நிவாரணம்

(காரைதீவு  நிருபர் சகா)

கனடா சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்ம் ஒரு தொகுதி கொரோனா பாதிப்புக்கான நிவாரணங்களை முல்லைத்தீவு வாகரை மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கு வழங்கிவைத்தது.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திற்கான உலருணவு நிவாரணப்பொதிகள் நேற்று புதியவளத்தாப்பிட்டி பளவெளிக்கிராமத்திலும் மல்வத்தை கணபதிபுரம் கிராமத்திலும் வழங்கிவைக்கப்பட்டன.

பெண்கள் தலைமைதாங்கும் அறுபது குடும்பங்களுக்கு இப்பொதிகள் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா கோரக்கர்கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.தினேஸ்குமார் ஆகியோர் கலந்தகொண்டு  அவற்றை வழங்கிவைத்தனர்.

ளவெளி சிவனாலயமருகிலும் கணபதிபுரம் கிராமசேவை உத்தியோகத்தர் பணிமனை வளாகத்திலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.