அட்டாளச்சேனை தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி.

(எம்.ஜே.எம்.சஜீத்)
கல்வியல் கல்லூரிகள் என்பது ஒரு தேசிய சொத்தாகும். அது ஒரு இனத்திற்கோ
அல்லது மதத்திற்கோ,குறித்த பிரதேசத்திற்கோ சொந்தமானதல்ல அந்த வகையில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் (05) வது  பீடாதிபதியாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம்-(1) சேர்ந்த திரு. கே.புண்ணியமூர்த்தி அவர்கள்  நேற்றைய தினம் (10) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதியும் தற்போது மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதியுமான அல்-ஹாஜ். எம்.ஐ. எம். நவாஸ் அவர்களும் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்திற்கு பொறுப்பான உப பீடாதிபதி யு.எல்.எம்.புகாரி, கல்விக்கான உப பீடாதிபதி ஏ.பாறூக், தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர் மற்றும் இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு புதிய பீடாதிபதி வரவேற்றதுடன் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் கல்விசாரா உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்