மட்டக்களப்பில் 409808 பேர் வாக்களிக்க தகுதி, 304பேர் போட்டி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-

வ.ஜீவானந்தன்
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்களத்தில் 304 பேர் போட்டிக்காக களமிறங்கியுள்ளனர். இம்முறை பொது கூட்டங்களுக்கு அனுமதிவழங்கப்படமாட்டாது எனவு ஐந்து பேர்களை கொண்ட குழுவினரால்த்தான் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் மக்களின் வீடுகளுக்கு செல்லும்பொது சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவது அவசியமானதாக கருதப்படும் எனவும் வேட்பாளர்களுக்கு இம்முறை தேர்தல் சட்ட விதிகளுக்கு அப்பால் மேலதிகமாக சுகாதார விதிமுறைகள் அடங்கிய கையேடுகளும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிர்பாக்கப்படுகின்றது.

சுகாதார திணைகள உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளமையினால் தபால் மூலமாக வாக்களிப்பதற்கான விண்னப்பங்கள் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் இம்முறை வாக்கு எண்னும் நடவடிக்கை பகலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.  

2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்புகளுக்கமைய நடைபெறவுள்ள இத்தேர்தலில் 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது. இதன்படி மட்டக்கள்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்தி 92 ஆயிரத்தி 809 வாக்காளர்களும், கல்குடாத் தொகுதியில் 1 இலட்சத்தி 19 ஆயிரத்தி 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 97 ஆயிரத்தி 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 65,321 வாக்காளர்களும், காத்தான்குடி பிரிவில் 31,268 வாக்காளர்களும், மன்முனைப்பற்று ஆரையம்பதிப் பிரிவில் 24,428 வாக்காளர்களும், வவுனதீவுப் பிரிவில் 22,237 வாக்காளர்களும், ஏறாவூர் நகர் பிரிவில் 26,463 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 23,092 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர் பற்று செங்கலடிப் பிரிவில் 28,893 வாக்காளர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரிவில் 19,442 வாக்காளர்களும், கோரளைப்பற்று வாழைச்சேனை பிரிவில் 18,518 வாக்காளர்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் முஸ்லிம் பிரிவில் 19,984 வாக்காளர்களும், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரிவில் 16,754 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவில் 16,337 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடிப் பிரிவில் 46,275 வாக்காளர்களும், போரதீவுப் பற்று வெல்லாவெளிப் பிரிவில் 31,459 வாக்காளர்களும், மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவில் 19,337 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியடைந்திருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன்  தெரிவித்தார்

இத்தேர்தலில் இம்மாவட்டத்திலிருந்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் கடந்த 2015 பொதுத் தேர்தலில் தமழ் தேசியக் கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஞானமுத்து சிறினேசன், எஸ்.வியாழேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரனுமாக மூவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்; அலிஸாஹிர் மௌலானாவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.