தமிழ்பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யவே கருணா அம்மான் அம்பாறையில் போட்டியிடுகின்றார். எம்.எஸ்.உதுமாலெவ்வை

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஒரு பாராளுமன்ற  பிரதிநிதித்துவம் கிடைத்து வந்தன. இந்தப் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமல் செய்வதற்காகவே முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடாமல் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். இது தொடர்பில் தமிழ் மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள  வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை சிதறடிக்க பேரினவாத கட்சிகளின் முகவர்களாக சுயநல தமிழ், முஸ்லீம் அரசியல் பிரமுகர்கள் களத்தில்: சிறுபான்மை மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமனற் உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரை ஆதரித்து அட்டாளைச்சேனைத் தேர்தல் குழுத் தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான அல்-ஹாஜ் ரு.ஆ.வாஹீத் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

விஷேட கூட்டத்தில் கலந்து கொண்டு  தெதாடர்ந்து உரையாற்றுகையில்

முஸ்லீம் அரசியல் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து நின்று அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 04 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என பெரும் பிரயத்தனம் மேற்கொண்டோம். தேசியக் காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா இந்த விடயத்திற்கு தான் ஒத்துழைப்பு வழங்கமாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லீம் மக்களின்  பிரதிநிதித்துவங்களை சிதறடித்து இல்லாமல் செய்வதற்கான சுயநல அரசியல்வாதிகள் களத்தில் வந்து நமது பெறுமதிமிக்க வாக்குரிமையை கேட்டு வருகின்றனர். இந்த விடயத்தில் தமிழ், முஸ்லீம் சமூகங்கள் அவதானத்துடன் செயற்பட்டு நமக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.