நாயை கடத்தி கப்பம் யாழில் சம்பவம்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம்  கையளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் “பொமேரியன்” இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய் வீட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போயுள்ளது.
குறித்த தம்பதியினர் எங்கு தேடியும் நாய் கிடைக்காததால் மனமுடைந்திருந்த நிலையில், அன்றைய தினம் மாலை அதே ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்கள் அவர்களின் வீட்டுக்கு வந்து உங்கள் நாயை ஒருவர் பிடித்து வைத்துள்ளார்.  அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நாயை தருவதாக கூறியுள்ளனர்.
 தம்பதியினரும் அதற்கு சம்மதித்து அவர்கள் கேட்ட பணத்தினை கொடுத்துள்ளனர். இதனையடுத்து அரை மணிநேரத்தில் குறித்த இளைஞர்கள் அவர்களின் நாயை கொண்டு வந்து ஒப்படைத்து சென்றனர்.
தம்மிடம் பணம் பெற்று சென்றவர்களே நாயை திருடிச்சென்றுள்ளதாக சந்தேகிக்கும் தம்பதியினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், தமது செல்லப்பிராணிக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.