கிழக்கில் ஊரடங்குச் சட்டத்திற்கு மக்கள் முழுமையான ஆதரவு—நகரங்களில் முற்றாக முடக்கம்

(ரீ.எல்.ஜே.கே)
இன்று ஞாயிற்றுக்கிழமை அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் பிறப்பித்துள்ள ஊரடங்குச் சட்டத்தை மக்கள் பூரணமாகக் கடைப்பிடித்து வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.ம்மாவட்டத்தில் நகரங்கள் அனைத்தும்  வெறிச்சோடிக் காணப்படுகின்றன.வீதிகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் முக்கிய வர்த்தக நகரங்களான மட்டக்களப்பு காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி செங்கலடி களுவாஞ்சிக்கு உட்பல நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஊரடங்குச் சட்டத்ததை மீறி வீதிக்கு வருவோர் படையினராலும் பொலிசாரும் சோதனையிடப்பட்டனர்.