நிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை உடன் வழங்குக – அம்பாறைமாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள் கோரிக்கை

சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக கணணி உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்வர்களின் நிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவை உடன் வழங்குக – அம்பாறைமாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள் கோரிக்கை
 
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  
 
சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக ‘கணணி உதிவியாளர்கள்’ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் மாதாந்த கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமையால் சேவையில் அமர்தப்பட்ட குறித்த கணணி உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள் சங்கத்தினர்  நேற்று  (28.05.2020) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

சமூர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடுபூராகவும் உள்ள சமூர்த்தி வங்கிகளுக்கு கணணி உதிவியாளர்கள் 1600 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மூன்று மாதகால பயிற்சியின் பின்னர் நிரந்தர சேவையில் உள்வாங்கப் படுவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு மூன்று மாதத்திற்குரிய பயிற்சிக்கால கொடுப்பனவும்  இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது 05 மாதங்கள் கடந்தும் தமது கணணி உதிவியாளர் சேவை நிரந்தரமாக்கப்படாமல் பயிற்சிக்கால கொடுப்பனவும் இல்லாமல் தொடர்ந்தும் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றோம். என பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட கணணி உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று செல்வதாகவும் இதனால் கொடுப்பனவு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாட்டில் கொரோணா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் நாம் தொடர்ந்தும் சமூர்த்தி வங்கிகளில் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றோம். கொடுப்பனவு வழங்கப்படாததால் எமது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்
இந்த சந்திப்பில் அம்பாறைமாவட்ட தமிழ்பேசும் கணணி உதவியாளர்கள்  சங்கத்தின் தலைவர்  எம்.எம்.ஹசீப்,  செயலாளர் எஸ்.ஏ.முஹம்மட் ஆபித்  ஆகியோர்  கலந்து கொண்டு இந்த தகவல்களை தெரிவித்தனர்

எனவே பாதிக்கப்பட்டுள்ள எமக்கு நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் விரைவில் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.