புதிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு.

(அ.அஸ்வர்)

அண்மையில் நடந்து முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து  தெரிவு செய்யப்பட்ட புதிய பிரதிநிதிகளுக்கான முதலாவது அறிவூட்டல் வேலைத்திட்டம் நேற்று (28) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டி.எம்.சிசிரகுமார தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டத்தில் மன்றத்தின் தலைமை அலுவலக விசேட வேலைத்திட்டப் பிரிவின் உதவிப்
பணிப்பாளர் நளின் அனுப்ரிய விசேட பிரதிநிதியாகக் கலந்துகொண்டு இச்செயலமர்வு தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.
இவ்வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாரை,  மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மூவின இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
இவ்வேலைத்திட்டம் நாடு முழுவதும் மாகாண ரீதியாக செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.