26ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகும் என  போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

பஸ் போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்படும்.

கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் நிட்டம்புவை  வரையில் மாத்திரமே இடம்பெறும்.

மாகாணங்களுக்கிடையிலான பஸ்கள் மினுவாங்கொடை வரை மாத்திரமே வரும். காவி வீதி ஊடாக வரும் பஸ்கள் பாணதுறைவரையிலும் ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக வரும் பஸ்கள் அவிசாவளை வரை பயணிக்கும்.

அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு வரும் பஸ்கள் நீர்கொழும்பில் நிறுத்தப்படவேண்டும்.

அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்கள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும்.

இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் சுகாதார பிரிவினரினால் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன