பிரதேச சபையினால் குளக்கட்டில் குப்பை அகற்றப்பட்டது.

 

 

(எருவில் துசி) எருவில் கிராமத்தில் உள்ள குளக்கட்டுகளில் காணப்படும் குப்பைகள் இன்று(24)பிரதேச சபையினால் துப்பரவு  செய்யப்பட்டது.

எருவில் கிராமத்தில் உள்ள சிறு குளங்களின் கட்டுப்பகுதிகளிலும் குளத்திற்குள்ளும் சிலர் குப்பைகள் போத்தல் கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள் என பலவகையானவற்றை போடுவதனால் பாரிய பிரட்சினைகளை விசசாயிகளும் நன்னீர் மீன்பிடியாளர்கள் பொது மக்கள் என பலர் பிரட்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது அதாவது போத்தல்களை உடைத்து
கொண்டு போடுவதனால் விவசாயிகள், மாடு மேய்ப்பவர்களின் கால்களில் வெட்டி காயங்களை ஏற்படுத்துவதையும்  அவதானித்த எருவில் கமநல அமைப்பு எருவில் வட்டார பிரதேச சபைக்கான உறுப்பினர் சி.காண்டிபன்  அவர்களிடம் முறையிட்டதற்கு அமைவாக அவர்கள் பிரதேச சபையில் கூட்டத்தின் போது இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தி தவிசாளரின் வழிநடத்தலில் இன்று JCB அனுப்பிவைக்கப்பட்டு குளக்கடடடுப்பகுதிகள் துப்பரவு  செய்யப்படுகின்றது.

துப்பரவு செயற்பாடுகளில் கமநல அமைப்பின் தலைவர் சா.பேரின்பநாயகம் செயலாளர் க.அமிர்தலிங்கம் கழகங்களின்  தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் மேற்படி செயற்பாட்டுக்கு விவசாயிகள் பொது மக்கள் என பலர்  தமது நன்றிகளை தொரிவித்தனர்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்க எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு  செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.