கோறளைப்பற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்.

(சுஆத் அப்துல்லாஹ்)

குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ள சிரமப்படும் மக்களுக்கு  இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பெற்றுக் கொள்ள சிரமப்படும் குடும்பங்களுக்கே இவ் இலவச குடிநீர் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த குடிநீர் விநியோகத்தை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த விநியோகத்தில் ஏழாயிரம் லீற்றர் குடிநீர் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.