ஒலுவிலில் ஐந்து கடற்படைவீரர்களுக்கு கொரனா. 75பேருக்கு இன்று பரிசோதனை. பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன்.

(படுவான் பாலகன்)

ஒலுவில் துறைமுக தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த கடற்படைவீரர்களில் 5 பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வெலிக்கந்தை ஆதாரவைத்தியசாலைகளுக்கு  நேற்றும், நேற்று முன்தினமும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படைமுகாமுடன் சம்பந்தப்பட்ட 80கடற்படை வீரர்கள் ஒலுவில்  தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் 5 பேருக்கே தற்போது கொரனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எஞ்சிய 75பேருக்கும் இன்று கொரனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.