சுமந்திரன் ஆளுமையுள்ள நேர்மையான அரசியல்வாதி. டாக்டர் செல்லமாணிக்கம் நீதிராஜன்.

சுமந்திரன் மட்டும் தான் இன்று இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்குள் ஒரே ஒரு ஆளுமையுள்ள நேர்மையான அரசியல்வாதி என டாக்டர் செல்லமாணிக்கம் நீதிராஜன் தெரிவித்துள்ளார்.

 சுமந்திரனின்  பேட்டி தொடர்பாக தனது முகப்புத்தகத்தில்  மேலும் தெரிவித்துள்ளதாவது

  சுமந்திரன் இன நல்லிணக்கத்தின் ஊடாக ஒரு தீர்வை பெற முயலுகின்றார். பல போலி தேசியவாதிகளும், பலரின் தனிப்பட்ட காரணம்களுக்காகவும் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் செய்திகளை சமூக வலைத்தளம்களில் பலர் பரப்பி வருகின்றனர். சுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால் இருதரப்பினரே நன்மை அடைவர். ஒன்று சிங்கள இனவாதிகள் மற்றது தமிழர்களை உசுப்பேத்தி பாராளுமன்றம்  சென்றுஅரசியல் செய்ய முற்படும் போலிதேசியவாதிகள்.

இந்த போலிதேசியவாதிகள் இனநல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதையே விரும்புகின்றனர். இதன்மூலம்தான் அவர்களைப்போன்ற ஆளுமை எதுவுமே இல்லாதவர்கள் தமிழர்களை உணர்ச்சி அரசியல் செய்து ஏமாற்றி அரசியல் செய்யலாம் என்ற நோக்கம்.

இன நல்லிமணக்கம் ஏற்படாமல், எதிர்காலத்தில் ஒரு ஆயுத வன்முறை மீண்டும் வந்தால் இவர்கள் தங்களின் பிள்ளைகள், அவர்களின் வாரிசுகளை போர்க்களத்துக்கு அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். படுவான்கரை போன்ற பிரதேசங்களில் இருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும் பிள்ளைகளை யுத்தமுனைக்கு அனுப்பிவிட்டு தங்களது பிள்ளைகளுடன் , வாரிசுகளுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன். உள்நாட்டில் சுமூக நிலை உருவாவதை தடுப்பதற்கு செயட்பட்டு இனம்களுக்கு இடையில் முரண்பாடுகளை தூண்டுபவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதை அல்லது குடியேறுவதை தடுக்க ஒரு சட்டம் இயற்றப்படவேண்டிய தேவையும் இப்போது ஏற்படுகின்றது.

அதுமட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையில் இனநல்லிணக்கத்தை குழப்பி இனமுறுகலை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம் இயற்றப்படவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது

எனக்கு சுமந்திரனை தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரை பற்றி ஆராய்ந்ததில் பரிசீலித்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே  இதனை குறிப்பிட்டுள்னேன் னெ தெரிவித்துள்ளார்.