இந்திய விசேட விமானம் இலங்கைக்கு வருகை.

 

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே  விசேட விமானம் கொழும்பு வந்தடைந்துள்ளார். கொழும்பில் பணிகளை பொறுப்பேற்பதற்காக கோபால் பாக்லே  இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் இலங்கையின் சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார் என்று இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.அத்துடன் இந்த சிறப்பு விமானத்தில் இந்தியாவினால் வழங்கப்பட்ட நான்காவது தொகுதி மருந்துப் பொருட்களும் எடுத்து வரப்பட்டுள்ளன என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.