Tag: படுவான்கரை

படுவான்கரை மக்களின் நிலை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிபோய்விடக்கூடாது!

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, படுவான்கரைப்பகுதியில் உள்ள மக்கள், கடந்த கால யுத்தத்தில் அகப்பட்டு பலவற்றை இழந்தவர்கள். இழந்தவைகளாக, பொருளாதாரம், கல்வி, விவசாயம் என பல்வேறு துறைகளை குறிப்பிட முடியும். அதற்கும் அப்பால், உயிரிழப்புக்களையும்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் பற்றிய மதிப்பீடு

மட்டக்களப்பில் சமீப சில நாட்களாகப் பெய்துவரும் கன மழையினால் நெல்வயல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு விவசாய பிரதிப் பணிப்பாளர் விஸ்வநாதன் பேரின்பராஜா புதன்கிழமை 04..12.2019 தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சுமார் 60 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து. அவற்றில் இம்முறைப் பெரும்போகத்திற்காக தாழ் நிலப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து வெள்ள நீர் அந்த தாழ்நில வயற் பிரதேசங்களில் தடைப்பட்டு தங்கி நிற்குமானால் நெற்பயிர்கள் அழிவடையக் கூடும். ஆயினும் இயல்பாகவே நெற்பயிர்கள் இரண்டொரு தினங்கள் நீரில் மூழ்கினாலும் நீர் வடியத் தொடங்கியவுடன் அவை வளரத் தொடங்கும். எவ்வாறாயினும் தொடர் மழையாலும் வெள்ளத்தினாலும் நெல் வயல்கள் தொடர்ச்சியாக பல தினங்களுக்கு வெள்ளத்தில் அமிழ்ந்திருந்தால் அவை அழிவடையக் கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போதைக்கு அழிவடைந்திருக்கும் நெல்வயல்கள் பற்றிய மதிப்பீடுகள் விவசாய அலுவலர்களால் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை விவசாயப் பிரதேசமும் கிரான் விவசாயப் பிரதேசமும் வெள்ளத்தினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கி;ன்றனர். சில குளங்களின் வான் கதவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திறந்து விடப்பட்டிருப்பதாலும் வான் கதவுகள் இல்லாத இன்னும் சில குளங்கள் நிரம்பி வழிவதாலும் நெல்வயல்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

மட்டு.படுவான்கரையிலும் துக்கதினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள திணைக்களங்களில் இன்று காலை தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது. உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து, அவர்களது குடும்பங்களுக்கு சோகத்தை வெளிப்படுத்துவது இந்த தேசிய...

மழைபெய்தால் ஆறாகும் படுவான்கரை வீதிகள்

- படுவான் பாலகன் - மாரி பிறந்தால் வீதிகளெல்லாம் ஆறாவதும், போக்குவரத்து தடையாகுவதும் வருடாந்தச் செய்திகளாகின்றன. படுவான்கரைப்பகுதியில் உள்ள வீதிகள் பெரும்பாலானவை, கிறவல்களை கொண்டு அமைக்கப்பட்டவையே. இதனால் வீதிகள் பள்ளங்களாவதும், பயணிகள் வீழ்ந்து எழுந்து...

கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள்

- படுவான் பாலகன் - கண்விழித்து வேலை செய்தால், சீதேவி வீட்டுக்கு வந்து சேர்வாள் கண்விழித்து வேலை செய்தாலும் சீதேவி வீட்டுக்கு வந்துசேர்வாள். இப்பெல்லாம் கடதாசிதான் கையில் வந்துசேருது, அதுவும் போறவழிதெரியல்ல என்கிறார் மூன்று தலைமுறையைக்...

மட்டக்களப்பு படுவான்கரைக்கென தனித் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும்படி கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திற்கென தனித் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும்படி மாகாணசபைக்கென தொகுதிகளை நிர்ணயம் செய்யும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்படி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக...