முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் ஆரம்பம்!!
முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.
பொரளையில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு – பொலிஸாரும் குவிப்பு
கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில்...
நந்திக்கடலில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தலைமையில் இன்று நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்தவகையில் நந்திக்கடலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை
முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவு தினம் தமிழர் தேசமெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை நகர்ப்பகுதியில் குறித்த நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தின்...
14 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடம் இன்று
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே...
மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த...
கிழக்கு ஆளுநர் நியமனம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞை!
தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். அதேபோல நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்று திரளுமாறு அழைப்பு
முள்ளிவாய்கால் மே 18 தமிழின படுகொலையின் நினைவேந்தல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் 18 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது இதில் மக்கள் அனைவரும் ஒன்று கூடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
அதிக வெப்பம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை அளவிடும் வெப்பச் சுட்டெண் அவதானமாக இருக்க...
கொத்தணி குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை தனித்தனியாக நினைவுகூர முடியாது – சி.வி.கே சீற்றம்
மே 18 அன்று கொத்துக்கொத்தாக இறந்தவர்களை தனித்தனியாக நினைவு கூரவேண்டும் என்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்திற்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொத்தணி குண்டுகள் காரணமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலையை தனித்தனியே நினைவுகூர முடியாது என்றும்...
புதிய ஆளுநர்கள் இன்று பதவிப் பிரமாணம்!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
அதன்படி இன்று (புதன்கிழமை) வடமேல் மாகாண ஆளுநராக...
வெள்ளைவான் புரளி: வாகனத்தின் மீது தாக்குதல்; மூவர் காயம்
கிளிநொச்சியில், வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற வாகனமே பொதுமக்களால்...
முள்ளிவாய்க்கால் நினைவுப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்தும் மே 18 முள்ளிவாய்க்கல் நினைவு வாரத்தை முன்னிட்டு பாண்டிருப்பு திரௌபதை அம்மன்...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் மற்றுமொரு கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்,
அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு 32...
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு!
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து...
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கைது!
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக...
போதைவஸ்த்து பாவனை ஒழிப்பு” தொடர்பில் பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு
நூருல் ஹுதா உமர்
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக "போதைவஸ்த்து பாவனை ஒழிப்பு" எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக, சாய்ந்தமருது சமுர்த்தி சமுக...
இந்தியா பயணமாகின்றது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் குழு
(சுமன்)
இந்தியாவில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றிற்காக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் குழுவினர் எதிர்வரும் 17ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 18ம் திகதி இந்தியா புதுடெல்லியில் இடம்பெறவுள்ள பாராம்பரிய மற்றும் கலாச்சார மாநாட்டுக்காக இந்தியாவில்...
பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்ததாக யாழில் பதற்றம்!
யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மன்னார் பகுதியில்...
களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா? விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா என்பதை அறிய இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் நேற்று...