கவிதை

தொற்றுக்கள் தொடாதவரை….

மாற்றான் வீட்டு மாடித் தோட்டத்தை, உச்சிக் கொட்டி வியந்து, உறவாடியதோடு, நின்றே போயிருந்தது என் வேலை. என் வீட்டு மாடி, மொட்டை மாடியே இன்னும்….. மஞ்சள் வேப்பிலை மகத்துவம் எல்லாம் மாலைவேளையில், யூடியுப் செனல்கள் தட்டியபோது, எட்டிப்பார்த்ததோடு, கடந்தே போயிருந்தது என் பொழுதுகள். என் வீட்டு மஞ்சள், நா(ட்)டு மஞ்சளே இன்னும்….. உள்ளுர் உணவு ஊட்டச்சத்தெல்லாம், உள்ளுர் சமையல் நிகழ்ச்சியில், ஊடாடியதோடு, ஊக்கமற்றே போயிருந்தது என் சமையல். என் வீட்டு...