போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் நிவாரணத்திற்காக ஒன்றரை இலட்சம் வழங்கி வைப்பு

 

(எருவில் துசி) கொகோரோ வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்திற்காக ஊரடங்கு சட்டத்தை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

இதனால் அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் நா.இந்திரநாதன் தனது பழுகாம வட்டாரத்திற்கு 150000.00 பெறுமதியான உலர்உணவு பொதிகள் 50 குடும்பத்திற்கு வழங்கி வைத்தார்.

இதனை பழுகாமம் கிராம சேவையாளர்களிடம்  கையளிக்கப்பட்டு பின்னர் மக்களுக்கு கிராம சேவையாளர்கள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.