தொழிலிக்கு சென்றால்தான் வீட்டில் நெருப்பு எரியும் : உதவி வழங்க முன்வர வேண்டும்

0
84

படுவான்கரையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கு பொது அமைப்புக்களும்,  தொண்டு நிறுவனங்களும்,  வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள மக்கள் வாழ்வாதாரத்தினை இழந்து வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள மக்கள் கூலித்தொழிலையும், விவசாயத்தினையும் நம்பியே அன்றாடம் வாழ்க்கையினை வழிநடத்தி செல்கின்றவர்களாக உள்ளனர். ஒரு நாள் வேலைக்கு சென்றால்தான் அன்றைய நாள் வீட்டில் நெருப்பு எரியும் அவ்வாறான சூழலில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற ஊரடங்கு சட்டத்தினால் தொழில் இன்றி வருமானத்தினை பெற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறான மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை நிறைவுறும் வரை உதவிகளை வழங்க அமைப்புக்களும்,  நிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் உடன் முன்வர வேண்டும்.

இதேவேளை அரசியல் வாதிகளும் தேர்தலுக்கு செலவிடும் செலவுகளை மக்கள் நிவாரணத்திற்காக வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.