வேல்முருகு மாஸ்டரின் 32 ஆவது ஆண்டு சிரார்த்த தினம் இன்றாகும்.

(சிவம்)

அம்பாரை மாவட்ட தமிழ் மக்களுக்கு அரணாகவும் எல்லைக் காவலனாகவும் இருந்து தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி மக்களின் அரசியல்  உரிமைகளைப் பெறுவதற்காக உழைத்து வந்த நிலையிலே அவர் இனந்தெரியாதோரால கடத்திச் செல்லப்பட்டு  சுட்டுக் கொல்லப்பட்ட வேல்முருகு மாஸ்டரின் 32 ஆவது ஆண்டு சிரார்த்த தினம் இன்றாகும்.

பாரதக் கதையினால் பெயர் பெற்ற பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் அருகினிலே இருக்கும் தனது இல்லத்தை செல்வா இல்லம் என பெயர் வைத்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பாசறையில் வளர்ந்து தமிழ் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஆகுதியாகினார்.

எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம், ஆவரங்கால் சின்னத்துரை, வண்ணையானந்தன, தங்கத்துரை, காசியானந்தன், செ.இராஜதுரை ஆகியோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக அவரது இல்லம் அமைந்திருந்தது.

அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற தன்னை அர்பணித்து வந்த நிலையிலே காலன் அவரைக் காவுகொன்று விட்டான். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட  அன்னாரது ஆன்னாரது உடலம் கல்முனை பாண்டிருப்பு எல்லை வீதியான கல்முனை தரவைப் பிள்ளையார் அலய வீதியில் போடப்பட்டிருந்தது.

அன்னாரது நினைவையொட்டி மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நாட்டில் ஏற்படட்டுள்ள தற்போதையை அசாதாரண நிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.