ஹர்தாலை வரவேற்ற மக்கள்.

0
182

 

வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

கொரோணா தொற்று நோயிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் எனும் தலைப்பில் தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி வாழைச்சேனை இஓட்டமாவடி மற்றும் கிரான் பிரதேசங்களிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன.பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுகிறது.

அரச அலுவலகங்கள் இயங்குகின்ற போதிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. அரச திணைக்களங்களில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வீயோரங்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்னர்.

தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவை இடம்பெற்ற போதிலும் உள்ளுர் சேவை இடம்றெவில்லை. இலங்கை போக்குவரத்து பேருந்துகள் சேவைகள் வழமைபோன்று இயங்கி வருகின்றன.