தமிழர் விடுதலைக் கூட்டணி வட கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டடியிடும்.

0
133

மத்திய செயற்குழு கூட்டம்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் 09.03.2020 காலை 10.30 மணியளவில் தலைவர் திரு.த.இராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நடைபெறப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

யுத்தம் முடிந்து 10 வருட காலமாகியும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாத வகையில் இந்த தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். இதுவரை காலமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டவர்களே இதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். அவர்கள் செய்யத் தவறிய, மற்றும் பேரம் பேசும் வல்லமை இருந்தும் அதை பயன்படுத்தாமல் தங்களின் சுயநலத்தால் செயற்படுத்த முடியாமல் போன அனைத்து விடயங்களுக்கும் நாம் முன்னுரிமை கொடுத்து, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் பாடுபட வேண்டும் என்ற கருத்து அனைத்து உறுப்பினர்களாலும் வலியுறுத்தப்பட்டது.

ஆக்கபூர்வமான முறையில் ஆரோக்கியமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு, காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன. வேட்பாளர்களின் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என கூட்டத்தை முடித்து வைத்து உரையாற்றும் போது செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் கூறினார்.

இரா.சங்கையா
நிர்வாகச் செயலாளர்
தமிழர் விடுதலைக் கூட்டணி