அறிவாலயம் படுவான்கரையில் சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கின்றது.

0
246

அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியம் அமரர் அலையப்போடி ஞாபகார்த்தமாக வருடாவருடம் நடாத்தும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்தில் தரம் 5இல் சாதனை ஈட்டிய மாணவர்களை பாராட்டுதலும், கௌரவித்தலும் நிகழ்வு எதிர்வரும் 27ம்திகதி கொக்கட்டிச்சோலை பிரதேச கலாச்சார மண்டபத்தில் காலை 09.30மணிக்கு அறிவாலயம் ஆலோசகர் சி. பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
படுவான்கரை மாணவர்களின் கல்விவளர்ச்சியில் அக்கறை கொண்டு பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பண்டாரியாவெளியைச் சேர்ந்த அலையப்போடி நல்லரெத்தினம் இதற்கான நிதியுதவியினை வருடம் தோறும் வழங்கி வருகின்றார்.
இவ்வாண்டு 80 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.குறிப்பிட்ட மாணவர்களுக்கு அறிவாலயத்தினால் 5000ரூபாவும், DFCC வங்கியினால் 5000ரூபாவும் என மொத்தம் 10 ஆயிரம் வைப்பிலிடப்பட்டு சேமிப்பு வங்கிக்கணக்குப்புத்தகம் வழங்கப்படவுள்ளன.
நிகழ்வில் ஆன்மிக அதிதிகளாக சிவஸ்ரீ சச்சிதானந்தக்குருக்கள் (தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கொக்கட்டிச்சோலை) ,ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மகராஜ் (இராமகிருஸ்ணவமிசன் மட்டக்களப்பு) உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களுடன், கல்வியாளர்களும், இன்னும் பல்வேறு அதிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.