மட்டக்களப்பில், புளட் சார்பில் போட்டியிட பொறியிலாளரின் பெயர் பரிந்துரை!

0
592

மட்டக்களப்பில், புளட் சார்பில் போட்டியிட பொறியிலாளரின் பெயர் பரிந்துரை!

தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவதற்கு பலரும் முயற்சித்து வரும் நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் இன்னமும் தமது கட்சியில் இருந்து, நாடாளுமன்றத்திற்கு போட்டியிடவுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவித்தல்களை வெளியிடவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பலரும் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், புளட் சார்பில் பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம் என்பவரின் பெயர், அக்கட்சியின் தலைவரின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அண்மையில் மட்டக்களப்பு நொச்சிமுனையில் நடைபெற்ற, கூட்டத்தின் போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதில், வாகரை தொடக்கம் துறைநீலாவணை வரையிலான கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் தெரியவருகின்றது.

தமிழரசு கட்சியின் சார்பிலும், பலரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமது விருப்பங்களை தெரிவித்துள்ள போதிலும், போட்டியிடவுள்ள உறுப்பினர்கள் தொடர்பிலான பெயர்விபரங்கள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை.