மண்முனை தென்மேற்கில் அறநெறி பாடசாலை நேரத்தில் நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த வேண்டும்

0
189

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அறநெறி பாடசாலை நேரமான ஞாயிற்றுக்கிழமையில்  நடைபெறும் தனியார் வகுப்புகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பிரதேச  அபிவிருத்திசார் அமைப்புக்கள் கோரிக்கை விடுகின்றன.

மாணவர்களிடையே ஒழுக்க விழுமியத்தினையும்,  அறநெறிக் கல்வியையும்  வழங்கும் பொருட்டு அறநெறி பாடசாலைகள் இயங்கி வருகின்றன.

அறநெறி பாடசாலையின் முக்கியத்துவத்தினை பலரும் கூறிவருகின்ற நிலையிலும், ஒரு சில தனி நபர்கள்,  குறித்த அறநெறி பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகளை நடாத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் அறநெறி பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அபிவிருத்தி சார் அமைப்புகள் கவலை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பில்,  உரிய அதிகாரிகள் கவனமெடுத்து அறநெறி பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் நடத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.