சாரணர் நூற்றாண்டு திருகோணமலை

0
189
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் சாரணர் அமைப்பு 1920ம் வருடம் தோற்றுவிக்கப்பட்டது.
இவ்வருடம் 100 வருடம் நிறைவு நிறைவு பெறுகிறது.இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை 2020.02.01 தபால்தலை வெளியீடு, சாரணர் ஸ்தாபகர் பேடன் பவுல் பிரபுவின் சிலை திறப்பு,  பரப்புரை வீதி நடை என்பன மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இமானுவல், முதல்நாள் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆகியோர் பிரதமஅதிதிகளாகவும், திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஜே.அருளானந்தம், மாவட்ட சாரணர் சங்க தலைவர் ந.விஜேந்திரன், ஆணையாளர் க.உமாபதிசிவம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
சாரணர் குழுவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய சாரணர் தலைவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிமாவட்ட சாரணர் ஆணையாளர்கள், சாரண ஆசிரியர்கள், சாரணர்கள், திரிசாரணர்கள், குருளைச்சாரணர்களும் கலந்து கொண்டார்கள்.