காடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்

0
128

காடுகளை, வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரியமான காணிகளை அபகரிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சிறிநேசன் சபையில் தெரிவித்தார்.

வனவிலங்குள் மற்றும் காடுகளை பாதுகாக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ள போதிலும் பாரம்பரியமாக வடக்கு,கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களின் காணிகள் இவ்வாறு காரணிகளை கூறிக்கொண்டு அபகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கால்நடைகளை வளர்க்கும் மக்களுக்கு மேச்சல் நிலம் தொடர்பிலான பிரச்சினையுள்ளது. மட்டக்களப்பில் கிரான், ஏறாவூர்பற்று, வவுனதீவுபற்று, வெல்லாவளி மற்றும் வாகரை பிரதேச செயலகங்களில் கால்நடை வளர்ப்பு பரவலாக இடம்பெற்று வருகிறது.

அத்துடன் பண்ணையாளர்கள் கால்நடைகளை வளர்ப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் இவை பாணப்படுகின்றன. எவ்வித தடைகளுமின்றி இவர்கள் கால்நடைகளை வளர்த்துவந்த சூழலில் தற்போது இங்கு சட்டவிரோத குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.