கல்லடியில் விபத்து – மூவர் காயம்

0
152

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் இரு வயதுக் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) பிற்பகல் 4.00 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி வந்த காரொன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றுடன் கொழுவப்பட்டு அதிக தூரம் இழுபட்டுச் சென்று இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவி யும் அவரது இருவயதுக் குழந்தையும் படுகாயமடைந்துள்ளதுடன் காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.